காகா காகா பறக்குது பார்

காகா காகா பறக்குது பார்
காகா காகாவென கரையுது பார்
சோக்கா நின்று குளிக்குது பார்
சோடியாய் இருந்து பார்க்குது பார்!

கூக்குரளிட்டு அழைக்குது பார்
கூடி திரின்து பறக்குது பார்
ஒற்றுமையோடு இருக்குது பார்
ஒன்றாய் கூடி மகிழுது பார்!

உண்ண உணவு கிடைத்தாலும்
உடனே இனத்தை அழைக்குது பார்
உண்மையாய் உழைக்கும் கக்கையினை
உலகே போற்றிடும் நிலையினை பார்!

எழுதியவர் : ரவி shrinivasan (18-Nov-15, 10:47 am)
பார்வை : 208

மேலே