சிறை வைக்கும் பேய்மழை - சிஎம்ஜேசு

முதலில் வெளிச்சம் மறைத்து - நாட்டை
கும்மிருட்டாக்கி தான் வருவதை உறுதி செய்கிறது மழை

காற்றை வீசி சாரலை தந்து வந்தது - மழை
என்றதும் நின்று போகிறது பொய் மழை

இசைவாக அசைப்பதை தொடர்ந்து - மரங்களை
விசையாக மாற்றி அசைக்க செய்கிறது புயல் மழை

பொழுதுகள் தெரியாமல் பொழிந்து - மக்களை
வீட்டுக்குள் முடக்கி சிறை வைக்கிறது பேய்மழை

வீட்டு வெடிப்பின் விளிம்பில் புகுந்து - ஓட்டை
ஓடைசலில் நுழைந்து நிறைந்து விழுகிறது ஒழுகல் மழை

ஏசியை ஓசியாக்கி ஈசீயை இமையமாக்கி
மின் இணைப்பை பின்னினைப்பாக்கும் தொடர் மழை

பள்ளம் நிறைத்து வெள்ளம் பரப்பி - மக்கள்
உள்ளம் சொர்வாக்குகிறது இடர் மழை

சாலைகளை மடக்கி தின வேலைகளை முடக்கி
மனங்களை கனமாக்குகிறது கனமழை

இயற்க்கை அறியாது செயற்கை சிந்தனைகள் கொண்டு
மேடுகள் தெரியாமல் பள்ளங்களில் வாழ்ந்து நின்றால்

சிறு மழையும் நம்மை அழவைக்கும் என்பதை
சீரிய திட்டங்களால் இடங்களை என்றென்றும் இயல்பாக்குவோம்

எழுதியவர் : சி.எம்.ஜேசு (18-Nov-15, 10:27 pm)
பார்வை : 66

மேலே