இதயம் அங்கேயே காத்திருகிறது
எதார்த்தமாய் எதிரில் பார்த்தேனடி..
எங்கோ பார்த்தது உன் விழிகள்..
அந்த நொடியில்..
எனக்குள் கேட்டேன்...
என்னையும் பார்க்காதா ?? உன் விழிகள் என்று..
இது நான்தானா என்று யோசிக்கும் முன்னே...
என் கால்கள் உன்னை சரணடைந்தது..
வழிமறந்த பிள்ளைபோல் உன் கண்களை துளாவினேன்.
பங்குனி வெயில் மறைத்த என் உருவத்தை..
ஆடி காற்றில் ஆடிவரும் உன் பார்வையோ..
என்னை அசையாமல் நிறுத்தியது..
நொடி பொழுதில் வந்த பேருந்தில்..
கன பொழுதில் ஏறும் பொழுதில்,,
என்னை உன் விழி ஓரத்தில், பார்த்த புன்முறுவலுக்கு..
அர்த்தமே தெரியாமல் ..என் இதயம் மட்டும் காத்திருகிறது..
உன் வருகைகாக..
முருகன்..