எப்போதும் தோற்பவன்

நீண்ட நெடிய தூரம்
நான் கடக்கும் பயணம்
சூன்யத்தில் முடிகின்றன

இறுதியில் வெற்றியென
நான் பொறுத்துகொள்ளும்
வலிகளும்,ரணங்களும்
பொருளற்றவையாகி விடுகின்றன
இந்த சூன்யத்தின் முன்

என் ஒவ்வொரு முடிவும்
தோல்வியென தெரிய வருகையில்
என் அன்பிற்குரிய நேசங்கள்
வெற்றியை கொண்டாட சென்றிருக்கின்றன

தனிமையும் துரோகமும்
பொங்கி நுரைக்கின்றன
என் மதுக்கோப்பைகளில்

எழுதியவர் : ஞா.தியாகராஜன் (20-Nov-15, 10:17 pm)
பார்வை : 74

மேலே