பாடல் -முஹம்மத் ஸர்பான்

(காதல் கடிதம் தீட்டவே......ஜோடி என்ற பாடல் ராகத்தில் எனது வரிகள்)

ம்ம்ம்ம்......
(உயிரின் உயில்கள் தூண்டவே!
நிலவின் கதவை தொட்டுவா
கண்ணின் ஈரம் காய்ந்திடும்
விண்ணில் பூக்கள் நட்டுவா
காதலும் காமமும் சொந்தக்காரர்கள்
இரண்டு மனம் இணைகையில் இன்பம் உன்னை சேர்ந்திடும்)2

உயிரின் உயில்கள் தூண்டவே!
நிலவின் கதவை தொட்டுவா
கண்ணின் ஈரம் காய்ந்திடும்
விண்ணில் பூக்கள் நட்டுவா

மார்பினின் ஓரத்தில்
இதயத்தில் வாழ்கின்றேன்
நெஞ்சத்தில் ஒட்டிக்கொண்டது
எந்தன் ஆயுல்லோ
அழகே! உன் சுவாசத்தில்
என் நெஞ்சம் துடிக்கிறது,
காதலின் ஆயுள்வரை
நாமும் உயிரல்லோ!ஒ..
கண்ணா உன்னில்
நானும் தொலைந்து போகின்றேன்
கடலோடு பனி போல்
உன்னில் நானும் கரைகின்றேன்.

உயிரின் உயில்கள் தூண்டவே!
நிலவின் கதவை தொட்டுவா
கண்ணின் ஈரம் காய்ந்திடும்
விண்ணில் பூக்கள் நட்டுவா

ம்...
அன்பே! உன் தேகத்தில்
தோளாக மாட்டேனா
குளிர் காற்று தீண்டும் போது
அணைக்க மாட்டாயா
ஆ...
நீ இல்லையென்றால் நான்
மண்ணோடு மண்ணாவேன்.
உடலுக்கு உயிரின்
முத்தம் குற்றமில்லையே!
உன்னை நான்
கேட்டால் வெட்கப்படுவாயா
சத்தமில்லா முத்தத்தில்
வியர்வை என்ன இலட்சனமோ

உயிரின் உயில்கள் தூண்டவே!
நிலவின் கதவை தொட்டுவா
கண்ணின் ஈரம் காய்ந்திடும்
விண்ணில் பூக்கள் நட்டுவா

எழுதியவர் : முஹம்மத் ஸர்பான் (21-Nov-15, 9:30 am)
பார்வை : 131

மேலே