ஹைக்கூ துளிகள் - மழை
"வெப்ப சலனம் வெளிவந்தாலும்
மண்மகள் உடல் முழுக்க மணக்கிறதே !"
- மழை முத்தமிட்ட வேளையில் .
"சாலையோர மரங்களுக்கு செந்நிற
சாயமிடும் புழுதிக்காற்று - பொன்னிற
பசுமையை துளைத்த மரங்களின் புலம்பல்."
- சலவை செய்ய வருமா மழை.
"மழை நின்ற பின்னும் சலசலப்பு
கோடையில் உயிர்விட்ட ஓடைகள்
மறுபிறவி கிடைத்ததன் மகிழ்ச்சி குரல். "
-மழையின் மழலைகள்.
"ஊட்டச்சத்து குறைந்த புன்செய் தாய் பெற்ற
பிள்ளைகளுக்கு பருவத்தே பாலூட்டும் செவிலித்தாய்."
- மழையின் வளர்ப்பு மக்கள்.
"விவசாய பெருமக்கள் புரியும் தவத்திற்கு
வடகிழக்கு பருவக்காற்று அளித்த வரம்."
- காலத்தே பெய்யும் மழை.
- K.B.பாலாஜி