பாலாஜி - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : பாலாஜி |
இடம் | : கடலூர் |
பிறந்த தேதி | : 14-Dec-1991 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 15-Nov-2015 |
பார்த்தவர்கள் | : 173 |
புள்ளி | : 9 |
இளைஞர் தின வாழ்த்துக்கள் .நான் கணிணியில் வரைந்த ஓவியம் இது.தற்போது தான் கற்றுக்கொண்டு இருக்கிறேன்.
"உனக்குத் தேவையான எல்லா வலிமையும், உதவியும் உனக்குள்ளேயே உள்ளன."
அனைவருக்கும் என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.நான் கணிணியில் வரைந்த ஓவியம் இது.தற்போது தான் கற்றுக்கொண்டு இருக்கிறேன்.
நம் காதலுக்கு
தூது செல்வதால் - எனக்கு
என்னை விட அக்கறை
என் கைபேசி மீதிலே...
அவள் என்னை கட்டி தழுவிய தருணத்தில்
அவள் கைதட்டி விட்டு ஓடினேன்
ஏன்னென்று தெரியவில்லை
அவள் என்னை தொட்ட தருணத்தில்
எனது ஆண்மை எங்கேயோ ஓட
ஒரு பெண்மையின் வெட்கம் என்னை தழுவியது .................
மா இலைத் தோரணங்கள்
மாமன் முறைக்கு அலங்கரித்து
வாழை மரம் எல்லாம் வாசலிலே வரவேற்க
மஞ்சளிலே குளித்தெழுந்த கயிறோ
மங்கலமாய் காத்திருக்க
பல நிற மலரெல்லாம்
தோரணமாய் தொங்கவிட-மனமேடையோ
மணம் வீசிக் காத்திருந்ததடி
மங்கை அவள் தலை நிமிராது
தோழியர்கள் கூட்டி வர
மான்குட்டி போன்ற அவள்
துள்ளாது மெல்ல நடையிட்டு பக்கம் வர
ஒருநாளும் நான் அணியாத பட்டுத்துணி
உடுத்தி காத்திருந்த காலம் அது
அக்கினித் தேவனை மந்திரம் ஏற்றி
வரவேற்த்து மங்கள மரகுச்சி எல்லாம்
ஒரு சேர ஒளி கூட்டியதடி
வென்முகிலோ என் கண்ணை மறைக்க
என்னவள் நடந்து வந்த தருணம் அது
வெட்கம் ஒன்று புதிதாக
அப்போது எனை பற்றிக்கொள்
நல்ல நேரம்பார்த்து
ஜாதகம் பார்த்து...
நல்ல நேரம்பார்த்து
பெண் பார்த்து...
நல்ல நேரம்பார்த்து
தாலி கட்டி...
நல்ல நேரம்பார்த்து
முதலிரவை முடித்து...
நல்ல நேரம்பார்த்து
விருந்து வைத்து...
நல்ல நேரம்பார்த்து
தேனிலவு சுற்றி...
நல்ல நேரம்பார்த்து
அறுவைசிகிச்சையில் குழந்தைப் பெற்று...
.
.
.
.
.
விவாகரத்து கேட்டு
மனு அனுப்பும்போது
என்ன நேரமாக இருக்கும்?
நல்ல நேரம்பார்த்து
ஜாதகம் பார்த்து...
நல்ல நேரம்பார்த்து
பெண் பார்த்து...
நல்ல நேரம்பார்த்து
தாலி கட்டி...
நல்ல நேரம்பார்த்து
முதலிரவை முடித்து...
நல்ல நேரம்பார்த்து
விருந்து வைத்து...
நல்ல நேரம்பார்த்து
தேனிலவு சுற்றி...
நல்ல நேரம்பார்த்து
அறுவைசிகிச்சையில் குழந்தைப் பெற்று...
.
.
.
.
.
விவாகரத்து கேட்டு
மனு அனுப்பும்போது
என்ன நேரமாக இருக்கும்?
வானக் கடலில் மேகம் குளித்து
கூந்தல் உலர்த்தும் துளிகளெல்லாம்
மழையாய் பொழியுதோ
மோகம் கொண்ட மேகங்கள்
தேகம் இரண்டும் கூடும் வேளை
கொட்டும் வியர்வைத் துளிகளெலாம்
மழையாய் பொழியுதோ
தாகம் கொண்ட தரணியெங்கும்
தானமாக மழையை விதைத்து
மேக வள்ளல் போகுதோ
பச்சைக் குடையாய் மரங்களெல்லாம்
ஒற்றைக் காலில் தவமும் இருந்து
கொட்டும் மழையில் நனையுதோ
மண்ணோடு காதல் கொண்டுதான்
விண்ணை விட்டு வருகிறாய்
மழையாக முத்தமிட்டுதான் மண்ணின் மடியில் குளிர்கிறாய்
அருவியாக விழுகிறாய்
அலைகளாக எழுகிறாய்
விழுவெதலாம் எழுந்திடதானோ உன்னில் பாடம் கற்கிறேன்
மழையே உன்னில் நானும் நனைந்து
மழலையாகிப் போகிறேன்
மண்
வினாத் தாளினை வாங்கியதுதான் தாமதம்
அன்பு எனத் தொடங்கும் குறளை
அடிபிறழாமல் எழுதுக
வினாவை படித்தவன் விடுவிடுவென எழுதிவிட்டேன்
ஏழுச் சீர் இரண்டடியில்
"அவள் பெயரை"
ஆமாம்
அன்பென்றாலே எனக்கு
ஆதியும் அந்தமும் அவள்தான்
தம்பி...
கடன் வாங்கி குடுத்திருக்குப்பா
மறக்காம போன உடனே எடுத்து
பீஸ் கட்டிரு...
--- இது அப்பா.
கண்ணு...
மறக்காம போய் சேர்ந்ததும்
ஒரு போன் போட்ரு
எகுத்த வீட்டு வாத்தியார் வீட்டுக்கு...
--- இது அம்மா.
ஏ ராசா..
வேளா வேளைக்கு வயிறார சாப்டுப்பா
வாரா வாரம் எண்ண தேச்சி குளிப்பா ..
--- இது பாட்டி.
எப்படியாவது இங்லீசு பேச கத்துக்குப்பா
நம்ம ஜில்லாவுலேயே நீதான் ஒசத்தியா வரணும்
--- இது தாத்தா.
என்ன மாதிரி நீயும் ஏர் ஒட்டி கஷ்டப் படாதடா
எப்படியாவது படிச்சி உத்தியோகத்துக்கு வந்துட்றா
--- இது அண்ணன்.
மறக்காம புது பேனா வாங்கிக்க
என் உண்டியல உனக்காக ஓடச்சிருக்கேன்..
--- இது
' தீப ஜோதியானவளே நமஸ்காரம்
திருவாகி வந்தவளே நமஸ்காரம்
ஆபத்பாந்தவியே நமஸ்காரம்
அனுதினமும் காத்திடுவாய் நமஸ்காரம்’
அன்பர்தமை வாவென்று அழைக்கும் மலை.
தன்பகத்தைக் காட்டும் மலை தன்னைக்
கருத்தில் உறும் அன்பர் இடம்
வாட்டுமலை அண்ணாமலை.’
பொருள்: நம் துன்பங்களைப் போக்குவதும், முற்பிறவியில் செய்த தீவினைகளை களைவதும், அன்பர்களை தன்னிடத்தே வா என்று அழைப்பதும், தன்னை நாடி வந்தவர்களுக்கு திருவடிகளைக் காட்டுவதும், தன்னை எப்போதும் மனதில் இருத்தி தியானிப்பவர்களின் இடர்களை வாட்டுவதுமாகிய மலை திருவண்ணாமலையே. இந்தப் பாடலை தீபமேற்றும் போது பாடினால் பிறப்பற்ற நிலை ஏற்படும் என்பது நம்பிக்கை.