என்னுயிரே சொல்லிடுவாய் === கலித்தாழிசை

உன்கண்கள் பேசுகின்ற ஊர்தனிலே நானிருப்பேன்
பன்மொழிகள் காட்டுகின்றாய்ப் பாங்குடனே உன்னழகில்
கன்னியுந்தன் காதலினால் காண்கின்ற காட்சியினால்
என்மொழிகள் மாறிடுதே என்செய்வேன் சொல்லிடுவாய்
என்னுயிரின் பாதியன்றோ ? என்னுயிரே சொல்லிடுவாய் .

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (23-Nov-15, 9:43 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 66

மேலே