நான் ஒளிந்திருக்கிறேன்
உன் எழுதுகோலில் இருந்து தெறித்து விழுந்த
சில மை சொட்டுக்களில்..
நான் ஒளிந்திருக்கிறேன் ..!
உன் கைக்குட்டை துடைத்துப் போட்ட
உன் வியர்வைத் துளிகளுள் ..
நான் ஒளிந்திருக்கிறேன்..!
உன் வீட்டு பரணில் உன் கைக்கு சிக்காத
ஒட்டடையாக இன்னும்..
நான் ஒளிந்திருக்கிறேன் ..!
உன்னை சுற்றிலும் மணம் பரப்பி வரும்
உன் தோட்டத்து செம்பருத்தியின் சிவப்பில்..
நான் ஒளிந்திருக்கிறேன்..!
நீ துணி துவைக்கும் கல் ..
அதன் மேற்பரப்பில் எப்போதும் ..
நான் ஒளிந்திருக்கிறேன்..!
உனது அதிகாலைகள் அத்தனையிலும்..
இளம் குளிர் காற்றாக ..
நான் ஒளிந்திருக்கிறேன்..!
என்னை மறந்து விட்டதாக நீ சொன்ன பொய்யில்
அதன் ஒவ்வொரு எழுத்திலும்..
நான் ஒளிந்திருக்கிறேன்..!
இன்று எங்கோ வாழும் உன் வாழ்க்கையின்
ஒவ்வொரு நொடியிலும் ..
நான் ஒளிந்திருக்கிறேன்..!
..
இந்த பனிப் பிரதேசத்தின் புல்வெளிகளில்
புல் நுனிகளில் ஒட்டியிருக்கும் பனித்துளிகளில்
நான் ஒளிந்திருப்பதைப் போல!