தோழன்

பத்து மாதங்கள் என்னை
சுமக்கவில்லை
பிரசவ வலியில் துடிக்க்கவும்யில்லை
இருந்தும் என்னை அன்போடு
பாதுகாத்தான் ;

எனக்கு நடக்க கற்று கொடுத்ததும் இல்லை
இருந்தும் எனக்கான வாழக்கையை
வாழ கற்று கொடுத்தான் ;

போ,வா என்று உரிமையோடு அழைப்பான் ;
கோபம் வந்தால் அடிக்கவும் செய்தான் ;
தவறு செய்தால் தலையில்
குட்டு வைத்து தவறை உணர்த்துவான் ;

வெற்றி பெற்றால் 'இது என்ன பெரிதா' என்று
கூறி என் அடுத்த வெற்றிக்கு
அடிகல் நாட்டுவான் ;
உண்ணாமல் இருத்தால் உரிமையோடு
உணவை உட்டி விடுவான் ;
உறங்கமால் அரட்டை அடித்து
இருக்கிறோம் தொலைபேசியில் ;

என்னால் முடியாது என்ற பொழுதில்
'உன்னால் மட்டுமே முடியும் '
என்று அறிவுரை கூறுவான்

பத்து மாதம் அல்ல
நட்பு என்னும் கருவறையில்
பல வருடங்களாய்
என்னை காத்தவனே

ஒன்று மட்டும் கூறு
இத்தனையும் செய்தாய்

நீ எனக்கு
அன்னையா?
தந்தையா?
உடன் பிறப்பா?
ஆசானா ?

புரிந்து விட்டது
இத்தனைக்கும் மேலாக
என் தோழன்

எனக்கு
அனைத்துமாய் நிற்பவனே
அடுத்த பிறவியிலும்
நான் உன் தோழியாகவே
பிறக்க ஆசை எனக்கு ....................



எழுதியவர் : திவ்யா (7-Jul-10, 9:05 pm)
Tanglish : thozhan
பார்வை : 3085

மேலே