எங்கே சென்றாய் நீ
எனக்குள் தான் இருந்தாயே...
இப்போது எங்கே சென்றாய் நீ...
இதயத்தின் வலி பொருக்கவில்லையடி...
உன்னை பார்க்காத நாள் இருந்தாலும்...
உன்னை நினைக்காத நாள் இல்லையடி...
இப்போது எங்கே சென்றாய் நீ...
இதயத்தை இடமாற்றம் செய்தாயே...
இப்போது என் இதயம் போன...
இடம் தெரியாது அலைகின்றேனடி...
இப்போது எங்கே சென்றாய் நீ...
எனை மண் மூடும் முன் வந்து விடு...
உயிர் போகும் முன் ஒரு முறையாவது...
பார்த்துச் செல்கிறேன்-நான்...?