காலம்

காலம்
----------
அது ஒரு உலர்ந்த தனிமை.
சுகமும், வலியும்
ஒரு குவளைக்குள் ஊறி நிறைவது
போன்றது அந்த நிலை.
ஆண்மையும், பெண்மையும்
இரண்டுமற்ற அல்லது
எல்லாமாகிய நிலை.
கண் முன்னே
நாம் கரைந்து கொண்டிருப்போம்.
காலம் விடாது.
உறைந்த நம் உடலங்கள் மீது
அது படரும்.
நல்ல நண்பர்களை அறிமுகம் செய்யும்.
பின் காலமும் இறக்கும்.
அவர்கள்- இறந்து போன காலத்தையும்
நம் உடல்களையும்
தங்கள் கருவறைக்குள் சுமந்து கொண்டு
வேறு வேறு இடங்களுக்குச் செல்வார்கள்.
நாம் மீண்டும் சந்திக்க மாட்டோம்.
காலம் தன்னைப் புதுப்பிக்கும்.
தொடர்பற்ற நிலங்களில் பிறப்போம்.
உன்னை எண்ணி நானும்
என்னை எண்ணி நீயும்
வாடும் வாழ்வு விதிக்கப்படும்.
காலம் தன்னைப் புதுப்பிக்கும்.

நாம் நிச்சயம் சந்திப்போம்.

எழுதியவர் : இர்பான் அஹ்மத் (25-Nov-15, 2:36 pm)
Tanglish : kaalam
பார்வை : 82

மேலே