உன் முகம் காண துடிக்கும் வேளை

முழு மதி வேளையிலே ..,
முகம் காண தோனையில் ..,
மழைசாரல் அது , சிறு தூரலாய்
எனை வந்து தீண்டிடும் போது..,
எதோ உன் சுவாசமே என்னை..,
தீண்டுவதாய் ஒரு உணர்வு..,!!!
அந்நொடி , பட பட வென .,
துடிக்கிறது என் மனது..!!!
எங்கோ ??? என்னருகிலேயே
" நீ"
இருப்பதாய் ஓர் உணர்வு ...!!!!
எனக்குள்ளே...
என் இரு விழியும் தேடும் உன்
முகம் காணும் கண்ணும் வரை....!!!!

எழுதியவர் : Praba (25-Nov-15, 3:11 pm)
பார்வை : 1873

மேலே