மீண்டும் meendum
கயவன் என அறிந்தும்
கள்ளமில்லா நெஞ்சம் அது
கரையேற மறுக்கிறது
காதலின் கடைசி படியில்
கை நழுவி விழும் நொடியிலும் ....
மீண்டும் மீண்டும் ...அவனின்
நினைவுகளும் , அவனோடிருந்த
நிஜங்களும் நிழல் போலே...
துரத்த....
கைவிடுத்து கரையேறவும் முடியாமல்...
கைகோர்த்து கரைசேரவும் முடியாமல்...
காலனின் கைகளில்...
மன்பொம்மையாய்...
மீண்டும் மீண்டும் இறந்து
இறந்து உயிர் பெரும் பீனிக்ஸ்
பறவையாய் என் வாழ்க்கை
முடிவேதும் தெரியாமல்...
மீண்டும் மீண்டும் கண்களில்
கசிந்துருகும் கண்ணீரோடு
காயங்களால் கணத்த...
நெஞ்சமதில் காதல் எனும்
கருவை சுமந்து கரையேற
வழியின்றி தவிக்கும் ஒரு
அபலையின் குரல்.....
மீண்டும் மீண்டும் ......
ஒலித்து கொண்டேயிருக்கும் ...
அந்த கயவனின் நெஞ்சத்தை அது துளைக்கும் வரை .....................!!!!!!!!!!!!!!!