மழையை எங்கடா காணோம்
மழையை எங்கடா காணோம்?
ஏண்டா மழை கொட்டோ கொட்டுனு கொட்டுது . நீ மழையிலே நனஞ்சிட்டு வந்திட்டு மழையைக் காணோம்ன்னு சொல்லற?
நான் கேட்டது உங்க வீட்டு மழையை.
ஓஹோ.... உங்க வீட்டு மழை எங்க வீட்டு மழைன்னு தனித் தனி மழைகளா இருக்குது?
நாங் கேட்டது நீ பெத்த உங்க வீட்டு மழைய.
என்னடா உங்கேள்வி பைத்தியகாரத்தனமா இருக்கு?
சரி புரிற மாதிரி சொல்லறேன். உங்க பொண்ணுப் பேரு என்ன?
அவ பேரு வர்ஷா.
அந்தப் பேருக்கு என்ன அர்த்தம்னு தெரியுமா?
அட அதெல்லாம் யாருக்கப்பா தெரியும்? சினிமாவிலும் சின்னத் திரைத் தொடர்களிலும் அந்தப் பேர சில கதை மாந்தர்களுக்கு வைக்கறாங்க. எங்க ரசனைக்குப் பிடிச்ச பேரு. அது தான் எங்க பொண்ணுக்கு இந்த அழகான வர்ஷா -ங்கற பேர வச்சிட்டோம். அவ பேரக் கேக்கறவங்கெல்லாம் "ஸ்வீட் நேம்"ன்னு சொல்லறாங்க. அது எங்களுக்குப் பெருமையா இருக்குடா.
அது அழகான பேர் தான் . சந்தேகம் வேண்டாம். மழை -ன்னு தமிழ்ப் பேரா வச்சாக் கேவலம். வர்ஷா -ன்னு இந்திப் பேரா வச்சா பெருமை கவுரவம். அட பொன்னுச்சாமி இந்திலா வர்ஷா - ன்னா 'மழை' -ன்னு அர்த்தம்டா. சரி. நீ கோவிச்சிட்டாலும் பரவாயில்ல. இனிமே நா உஞ் செல்லப் பொண்ண எம் மருமகள மழை - ன்னு தான் கூப்பிடுவேன். வேணும்னா நீ எம் மேலே மான நஷ்ட வழக்குப் போட்டுக்க.