தாத்தா பாட்டி பேத்தி
மனதில் உன் யோசனை - நல்ல
மழையில் மண் வாசனை
தோன்றும் காட்சியின்
தோற்றம் மாறும்
மாற்றம் காணாது
நம் அன்பு ...
கடந்த காலத்து காட்சிகள் எல்லாம்
கனியே உன் கண்ணில் கண்டேன்
நிகழும் காலத்தில் நகரும் வாழ்க்கையில்
அகத்தில் ஆனந்தம் உன்னால் பெற்றேன்
பேத்தி உன் வரவிலே - என்
வறண்ட இதயத்தில் விளைச்சலே
உயிரே உன் வாழ்வில் வெளிச்சம் காட்ட
உருகும் மெழுகாகி கரைவேன்
பயிரே நீ வளர பார்க்கத்தான்
உயிரை உடலில் சிறை வைத்தேன்
உலக அதிசயங்களின் உச்சம் நீயே........