வாழ்க்கை பயணத்தில் தாய்

வாழ்க்கை பயணத்தில் தாய்



நேசம் கலந்த சுவாசம் தரும்
கருவறையில்
தொடங்கிய எனது முதல் பயணம்
பிறக்கும் முன்னே கற்றுவிட்டேன்
நீச்சல் உன் உள்ளே ......................'


வசந்தமாய் தொடங்கிய
எனது வெளிஉலக பயணம்
என்னமோ ஏனோ நானறியாமல்
என் அன்னைக்கு மட்டும்
தந்து விட்டேன் வலி ........................'


நடை வண்டி இல்லாமல்
போகும் பாதை கூட தெரியாமல்
தத்தி தத்தி எட்டு வைத்தேன்
துணைக்கு வருவாளே என் அம்மா
என் நடைக்கு ஈடு கொடுத்து .................'


சாதம் உன்ன தெரியாத வயதில்
சாதனைக்கான ஒரு எண்ணம்
இருக்க செய்தாய் என்னுள்ளே
அசாதரனமாய் நான் பெற
எனக்கொரு வழிகாட்டியாய் நீ ................'

பள்ளத்திலிருக்கும் எனக்கு
பயின்று தூக்கிவிட
நான் சென்றேன் பள்ளிக்கூடம்
படிக்காமல் இருந்தாலும்
முழுநேர ஆசிரியையாய் என் அம்மா ..........'

காலம் தூக்கிவிட
கால் பதித்தேன் நான்
கல்லூரி வாழ்க்கையில்
கவலையை கலைத்து விட்டல்தால்
கடைசிவரை வருவாளா கல்லூரி தோழி
தேடாமல் வந்த தோழியாய் என் அம்மா .......'

வாழ்க்கையின் அடுத்த பருவத்தில்
உன் நிழலில் இருக்கும் எனக்கு
தேடிபிடித்து நீ தந்தாய்
எனக்கொரு வாழ்க்கை துணை
எப்படி தந்தாய் இன்னொரு அன்னையை அவளை ,'

இறக்கும் போது கூட நீ என்னை பிரிய வேண்டாம்
பிரியமாய் நான் கொஞ்ச
எந்தன் பிள்ளையாக
எந்தன் தாயே நீ வா என்னிடம்
எந்தன் என்னுடனே
உன்னை சுமக்க காத்திருக்கும் என் நெஞ்சம் .......'









என் அன்னைக்கு சமர்ப்பணம் .......

எழுதியவர் : தாய்பாலா (9-Jun-11, 5:09 pm)
பார்வை : 453

மேலே