யாரறிவாரோ-
நேற்று வரை சிறந்த
கவிதைகளின் பக்கத்தில்
ஓரளவு முன்னேறி இருந்த
எனது கவிதை மறுபடியும் இன்று
காணாமலே போன காரணம்
யாரறிவாரோ---
நேற்று வரை என்னை
கண்களில் ஒளிப்பதிவு செய்து
வந்த அந்த பெண்ணாள்
இன்று ஒரு ஓமக்குச்சியின்
இருசக்கர வாகனத்தில்
ஒயிலாக அமர்ந்து
சோரம் போகிறாள்…….
சே, ஓரம் போகிறாள்.
எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது ?
காரணம் யாரறிவாரோ!