ஓர் இரவில்

கார் மேகம் சூழ்ந்த வானில் - ஓர் இரவில்
சிறிதாக ஒளிர்ந்த மதியினை விழுங்க
கரு மேகம் திமிங்கலமென விரைந்து வர - எதிர் வீட்டில்
மங்கை ஒருத்தி மத்தாப்பினை கொழுத்தும் நேரத்தில்
மயிலையொத்த மழலை ஒருத்தி மானையொத்த தமக்கையை அழைக்க
இருண்ட வானில் நட்சத்திரங்களாய் மின்னிய மத்தாப்புகள் - அதைக் கண்டு
மலைத்து நின்ற மழலை மகிழ்ந்து நின்ற மங்கை
பார்த்து ரசித்த என் கண்கள் சட்டென்று உதித்த வர்ணனை வரிகள்!!!

எழுதியவர் : மோகன் ராஜா - மோ ரா (28-Nov-15, 10:45 pm)
Tanglish : or iravil
பார்வை : 3399

மேலே