கனவாக எல்லாம் கனவாக

உறங்க நினைக்கிறேன்
உறங்க முடியவில்லை .
இமைகள் மூடியும்
இதமான நினைவுகள்
இரவின் மடியில்
விழித்துக் கொள்கின்றன .
கனவாக எல்லாம் கனவாக ...


கவிதை எழுதுகின்றேன்
கனவில் தோன்றியதை
எழுத முடியாமல்
விடை தேடுகின்றேன் .என்
இதயத்தின் ரணத்தை
எப்போது தான் மாற்றுவேன் ?
கனவாக எல்லாம் கனவாக ....


சிக்கித் தவிக்கும்
சின்ன இதயம் ; தேடித்
திரியுது உன்றன் அன்பை
நீயும் மன்மதனாக வரும்
வேளையில் மனக்கதவுகள்
பூட்டிக் கொள்கின்றன .
கனவாக எல்லாம் கனவாக ...


என் தலையணையின் ஓரம்
நான் சிந்திய கண்ணீரின் ஈரம்
விழிநீரில் நனைந்திடுமா சோகங்கள் .
விழித்தப் பின்னாவது
என் கனவுகள் கை சேருமா ?
நானும் காத்திருக்கிறேன் உனக்காக
கனவாக எல்லாம் கனவாக ....


மந்திரப் புன்னகையில்
மயக்கம் அடைந்தேன் .
தேனிதழ் சுவைதனில் எனது
தேகம் குளிர்ந்தது .காதல் மலர்ந்தது .
பூ பூக்கும் புதுப் பார்வை
உன் பார்வை பூரிப்பு அடைகிறது .
கனவாக எல்லாம் கனவாக ....


வில் , அம்பு , இமை
கத்தியால் வீரம் இழந்தேன் .
தேகம் மெலிந்தேன் .
கண் பேசும் வார்த்தைகளில்
கவிதை புனைந்தேன்
புதிதாய்ப் பிறந்தேன் .
கனவாக எல்லாம் கனவாக ....


இமை தேடும் மனத்தில்
என்னுயிர்க் காதலைக் கண்டேன்
காதல் கொண்டேன் .
மலர் தூவும் மனம் பரப்பும்
காற்று என்றன் வாசம் ;
அதுவே என்றன் சுவாசம் .
உயிர் சுவாசம் உன்னிடம் கொண்டேன் .
கனவாக எல்லாம் கனவாக ....

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (29-Nov-15, 11:50 am)
பார்வை : 81

மேலே