உன்னை அறிந்தேன்

மலரை பார்த்தேன்
உன் அழகை அறிந்தேன்

நிலவை பார்த்தேன்
உன் முகத்தை அறிந்தேன்

மீனை பார்த்தேன்
உன் விழியை அறிந்தேன்

வெண் சங்கை பார்த்தேன்
உன் கழுத்தை அறிந்தேன்

குயிலை பார்த்தேன்
உன் குரலை அறிந்தேன்

நாணலை பார்த்தேன்
உன் குணத்தை அறிந்தேன்

எழுதியவர் : கவி ஆறுமுகம் (29-Nov-15, 3:51 pm)
Tanglish : unnai arinthen
பார்வை : 128

மேலே