விடுமுறை வேதனை

வேதனை கலந்த
நாட்களோடு
இன்னொரு விடுமுறை
நாளும் சேர்ந்தது....

நீ இல்லா நிமிஷங்கள்
நிம்மதி
தொலைந்த
நிமிஷங்களாகின.....

உன்னிடம் நானும்
என்னிடம் நீயும்
கவலைகளை
ஒளித்துக்கொள்ளும்
அன்பின் வலிகள்
ஏராளம்.....

வந்த காதலும்
வாங்கித் தந்த
வலிகளும்
வாழும் வரை
எம்மோடு வாழும்....

நினைவிழந்து
போகவில்லை
அதனாலே
நிம்மதியிழந்து
சாகிறேன்.....

கண்ணீர்த்
துளிகள்
மண்ணைத்
தொடும்....கவலைகள்
விண்ணைத் தொடும்....

என்னருகில்
உன்னைக் காண
எந்தன்
ஆயுளும்
வேகுதடி....

எழுதியவர் : தம்பு (29-Nov-15, 8:27 pm)
Tanglish : vidumurai vethanai
பார்வை : 91

மேலே