புவி மட்டுமல்ல வெப்பமயமாவது
உலக நாடுகள் இன்று கூடி
உடனடி தீர்வுக்கு
ஆலோசிக்கின்றனர்;
புவி எங்கும்
வெப்பமயமாகிறது,
புவி வெப்ப அதிகரிப்பு
உச்சம் தொட்டால்
உலகம் தாங்காது,
இங்கு ஒருயுறும் தங்காது என
தவிர்க்கவே தகைக்கின்றனர்;
நிஜத்தில் புவி மட்டுமல்ல,
மானிட மனமும்
இங்கே வெப்பமயமாகி விட்டது;
ஒரு சில நாடுகள் தன்னிடமிருந்து
வெளியேறும் தாக்கத்தை
பொறுத்துக்கொள்ள வேண்டுவதும்
இன்னும் சில நாடுகள்
இதை எதிர்ப்பதுவும்
இன்னும் அங்கும் இங்கும்
எல்லா நாடுகளில்
எதிர்ப்புகள் பெருக்கெடுக்க
பேசி தீர்த்து ஆவது என்ன?
இயற்கை என்பது ஒரு கட்டமைப்பு;
இறைவனால் உருவான சீரமைப்பு,
இதை சரிபடுத்த முடியுமா இந்த கூட்டமைப்பு;
காலம் சொல்லும் பதில்,
கலி காலம் எப்படி சொல்லும்?
எல்லோருக்கும் தெரியுமே!