முகமறியா மனிதர்கள்

கர்ம வீரரும், காந்தியடிகளும் ,
அறிஞர் அண்ணாவும் அம்பேத்காரும்
கற் சிலைகளானபோதுதான்
அவர்களை அடையாளம்
கண்டு கொண்டோர் பலர்!!

இடது கை அறியாமல்
வலது கை செய்ததை
ஊடகங்கள் இன்றி
உலகமே கண்டு வியந்ததே !!!

இன்றையத் தலைவர்கள்
ஊடகங்களில் தங்கள்
பெயர்களை பதிக்கவே
புகழ் பரப்பும் கொடைத்
தொழிலைச் செய்துவருகின்றனர் .

தொண்டாகச் செய்ய வேண்டியதை
தொழிலாக செய்கின்றனர் !
கடமையைக் காட்சிப்
படங்களாகவே செய்கின்றனர் !!!

அம்பேத்கரையும் பெரியாரையும்
நினைவு படுத்தும் தலைவர்கள்
அவர்கள் கொள்கைகளை
நினைவில் வைக்க
மறுக்கின்றனர் !!!

மனித நேயத்தை மறந்த
ஊடகங்கள் மக்களின்
அறியாமையை
அகற்ற வேண்டும் !
அச்சத்தை நீக்க வேண்டும் !
அதன்வழி சேரும் செல்வத்தை
ஆக்கவழியில் செலவழிக்க
வேண்டும் !!!


வெட்டியாக ஒரு நிகழ்ச்சி
நடத்தி நாடக நட்சத்திரங்களை
அழைத்து சூப்பர் குடும்பமும்
அமுல் குடும்பமும்
என்ற ஒன்றை ஏற்பாடு
செய்து ஒரு வங்கிக்
காசோலையையும் ஒரு
கிபிட் ஹம்பரையும்
கொடுக்கவா ஊடகம் !!!

வெட்கக் கேடு !!
ஒரு பக்கம் திருப்பினால்
அரசியல் புகழ் பரப்பும்
ஊடகம் !
மறு பக்கம் திருப்பினால்
நட்சத்திரங்களின்
புகழைப் பரப்பும்
ஊடகம்!!

புகழைப் பரப்புவதற்கு வாழ்க்கையா?
புகழோடு வாழ்வதற்கு வாழ்க்கையா ?
இன்பம் தருவது எது ?

அன்று முகமறியா மனிதர்களாக
வாழ்ந்து தம் புகழைப் பரவச்
செய்தவர்கள் பலர்!!!
இன்று தம் புகழை
ஓயாமல் பரப்பி
தம்மை பெரிய
ஆளாகக் காட்டிக்
கொள்ளும் கோமாளி
மனிதர்களாக
வாழ்கின்றனர் சிலர்!!

எழுதியவர் : பெ.ஜான்சி ராணி (30-Nov-15, 7:29 pm)
பார்வை : 97

மேலே