கிட்டாதா மோட்சம்
”கிட்டாதா மோட்சம்?”
துறந்தவன்
துறக்கிறான்..
ஆடையையும்…
ஆசையையுமே!
திறப்பவளுமே
துறக்கிறாள்
ஆசையையும்..
ஆடையையுமே!
துறந்தவன்
துறக்கிறான்
உணர்வுகளை!
திறப்பவளுமே
துறக்கிறாள்
தன்னுணர்வுகளை!
துறந்தவன்
கொள்கிறான்
மௌனம்!
திறப்பவளுமே
கொள்கிறாள்
மௌனம்!
துறந்தவன்
பெறுகிறான்
பேரின்பம்!
திறப்பவளும்
கொடுக்கிறாள்
சிற்றின்பம்! -- அவளின்
வயிற்று பசிக்காகவே…
துறந்தவனும்….
திறப்பவளும்..
ஓரே பாதையிலும்…
ஓரே பாவனையிலும்
இருக்கையிலே…
கிட்டாதா?
மோட்சம்
திறப்பவளுக்கு…..!
---- கே. அசோகன்.