மழையவள்

மது உமிழ்ந்த
வதியே...!
மலர்வனத்து
துளியே...!
முகிழ்ந்த மணி
மழையே...!
உன்னோடு
நடக்கையில்
நனைகிறேன்...!
நகர்ந்து -
ஒதுங்கினால்
குளிர்கிறேன்...!
மென் சாரலாய்
என்னை
சந்தித்த நீ...!
மின் தூறலாய்
வந்திங்கு
துன்பிக்கும் தீ...!
நீண்ட நில
மஞ்சம் விழுந்து
மெல்ல...
மன மடியில்
புரளும் ...
மதனின்ப
வெள்ளம் நீ...!
நாளும் -
நதியலையாய்
தழுவி...
நாடியோடும்
இசையருவி
நடை பழகி...
ஆறெனவே
கலந்த நகை
முந்நீரே....!
விசுபின் -
காதல் வரவாய்
விளைந்து...
இதயக் கண்மாய்
ஏரிக் குளங்கரை
நிறையவே...
பகலுமிரவும்
பொழிந்திடும்...
முகிலின்
இன்ப
மொழியே...!
முதிர்ந்த
பழத்தின்
சுவையே...!
உயர்ந்த மேகம்
ஈன்ற முத்தே...!
உயிர்த் தேகம்
கொண்ட வித்தே...!
அகிலம் காட்டும்
அலகிலா சொத்தே...!
அவனிபூக்க அலர்ந்த
அருந்தவக் கொத்தே...!