உயிர் வேர்

நீ தேடும் இடத்தில்
நான் இல்லை ...
நான் வாடும் இடத்தில்
நீ உண்டு ...

தேடலின் முடிவில்
தெரிந்திடுவாய்
தேடலே நான் தான்
எனும் பொழுது
கண்களில் ஓரம்
கசிந்திடும் நீர்
வாடும் உயிர்க்கு
மருந்தாகும் ...

விதைத்தவன்
அறியான்
என்றாலும்
அறுவடை செய்ய
வந்திடுவான் ...
வந்தவனுக்கு
தந்தருள்வோம்...
வேரில்லா கட்டையை ...

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (1-Dec-15, 6:42 pm)
Tanglish : uyir ver
பார்வை : 127

மேலே