உயிர் பேறு
திரண்டு கொழுத்த
கவர்ச்சிக்குப் பின்
குலை தள்ளும்
கதலி வாழை போல்
வெட்டிச் சாய்த்து
வேரோடு மாய்த்து
தொப்பூழ் அறுத்து
தோல் உரித்து
உடல் கிழித்து
உதிரத்தால் பினைந்து
கூள மேட்டில்
குவித்தாலும். ....
தண்டுக் கிழங்குகள்
தனித்துடிப்போடு
மீண்டும் மீண்டும்
உயிர்த்துத் துளிர்க்கும்
தளிருடல்கள்