மட்டில்லா நேசந்தான் மாண்பு --- முன்முடுகு வெண்பா

எத்திக்கு மெத்திக்கு மிச்சைக்கு வித்திட்ட
முத்தத்தி லச்சத்தை இற்றைக்கு -- மொத்தத்தை
விட்டிட்டேன் ; நம்காதல் வித்தாகி நிற்பதற்கு
மட்டில்லா நேசந்தான் மாண்பு .


பொருள் :-

எல்லா திக்குகளிலும் அளவற்ற அன்பினால் வரும் இச்சையினால் முத்தமிட்டாய் . அதனால் என்றன் அச்சம் நீங்கி இன்று மொத்தமாக உன்னை என்னுள்ளம் நாடுகிறது . இதற்கு காரணம் நமது உண்மைக் காதலும் அதனால் வந்திட்ட மட்டில்லா நேசமும்தான் . இதனால் நம் காதல் மாண்புடையதாக உள்ளது என்று தலைவி தலைவனிடம் கூறுகின்றாள் .

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (6-Dec-15, 4:12 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 120

மேலே