வில்லாபுரத்திற்கு வீடுமாற்றி
வில்லாபுரத்திற்கு வீடுமாற்றி
மூன்று வருடங்களாகின்றன
ப்ளஸ் ஒன் படிக்கும் முத்துபாண்டி
என்னைபோல அம்மா பிள்ளையாகவே இருக்கிறான்
இங்கேயும் தெருமுக்குகளில்
பள்ளிவிடும் நேரத்தில் நிற்பதற்கென்றே இருக்கிறார்கள்
ஐந்தாறு பேர்
எல்லா ஏரியா பெண்களும்
ஒரே மாதிரியே வெட்கப்படுகின்றனர்
கைலியும் முள்ளுதாடி முகமுமாய்
வில்லாபுரத்திலும் "தனுஷ்"ரசிகர்கள் உள்ளனர்
தீபாவளிக்கு முந்திய இரவு
இங்கே யாரும் கோலமிடுவதில்லை
கோனார்மெஸ் புரோட்டாவும் கிடையாது
பழையதெரு நண்பர்கள் டூவீலரில்
வேலைக்கு போகின்றனர்
காதலிகளின் திருமண போஸ்டர்களை கடந்து
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
