அவளா சொன்னாள் பிடிக்குமென்று

அவளா சொன்னாள் பிடிக்குமென்று
இருக்காது....
என்னைப் பார்க்காமல் இருக்க
பிடிக்குமென்று சொல்லியிருப்பாள்..
என்னோடு பேசாமல் இருக்க
பிடிக்குமென்று சொல்லியிருப்பாள்...
என்னை வம்புக்கு இழுக்க
பிடிக்குமென்று சொல்லியிருப்பாள்....
என் கண்ணீர் துளிகள்
பிடிக்குமென்று சொல்லியிருப்பாள்.....
என் கவலை ரேகைகள்
பிடிக்குமென்று சொல்லிருப்பாள்......
அவள் எப்படி சொல்லியிருந்தாலும்
அவளை எனக்குப் பிடிக்கும்...
அவள் எண்ணம் ஓடாவிட்டால்
எனக்கு பைத்தியம் பிடிக்கும்....