மழையே ஒரு வேண்டுகோள்

மழையே நீ
விடுப்பில் செல்லலாம்
விடுமுறையில் செல்லலாம்
ஏன் இப்போது விடை பெற்றே செல்லலாம்
மறுமுறை வரும்போது
பருவக் கோளாறாக அல்ல
பருவமாக மலர்ந்து வா !

-----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (9-Dec-15, 9:48 pm)
பார்வை : 146

மேலே