போதும் அடங்கு

போதுமட்டும் பெய்துவிட்டுப் போய்விடுவா யென்றிருந்தோம்
ஏதுகுறை வைத்தோம் இயம்பிடுவாய் !- காதுனக்குக்
கேட்காதோ? வான்மழையே! கெஞ்சுகிறோம் ஆடிய
ஆட்டமும் போதும் அடங்கு .

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (9-Dec-15, 11:27 pm)
பார்வை : 79

மேலே