மழை

காற்றைக்கருவாக்கி..!

மேகமாய்வளர்ந்து..!

மழையாய்ப்பிறந்து..!

பல மலைகனிளில் தவழ்ந்து...

பலர் பசியாற்ற எண்ணி..!

ஏரி
குளம்
குட்டை
எங்கெனத்தேடி
திரிந்திங்கோடி வந்தேன்..!

தேடியத்
திரும்பியத் திசையெங்கும்..
பல
அகன்றசாலைகள்
அடுக்குமாடிகள்
கனரகத்தொழிற்சாலைகள்
மட்டும்தான் காணக்கிடைத்தது..!

நான் இதுவரை
கண்டது என்னவோ
அகன்ற காடுகள்
அற்புத பறவைகள்
அறிய விலங்குகள்
அயிரய்மீன்கள் மட்டுமே...!

ஏமாற்றத்தில்
என்னச்செய்வதென்று
தெறியாமல்
அலைகடலைத்
தேடித்தான்
ஆற்றை நாடிச்சென்றேன்...
ஆற்றங்கரையோர மெங்கும் ஏழைக்குடிசைகளே...

கரையைத்தோடும்
முன் எல்லாம் நடந்துவிட்டது...!!!

இது
யார் தவறு....????

எழுதியவர் : பிரகாஷ் (11-Dec-15, 4:19 pm)
பார்வை : 141

மேலே