சிதறவிட்ட மனசாட்சி
நம்பிக்கை அற்ற
நயவஞ்சகர்களுக்கு
நாற்பது கண்கள் கொண்டு
நோக்கினாலும்
நல்லவையும்,நல்லதும்
தந்திர வேலைக்கு
மந்திரமாகும் மாயக்கூத்தே!
எந்திரம் போல் இவரெண்ணங்களும்
செய்கைகளும்
எழுதாத கதைகளே!
கண்களில் கண் பதித்து தேடியும்
கனிவான விஷயங்கள்
கண்ணில் படவில்லையாம்
கயவர்களுக்கு!
சில நேரங்களாவது
சிறிதேனும்
சிதறவிட்ட மனசாட்சியை
தேடிட்டால்
இத்தனை கண்கள்
தேவைப்படாது!