வரங்களாசாபங்களா
பாரங்கள் சுமக்கும் பறைவகள்
வரங்களா... சாபங்களா...?
பெற்றோருக்கோ அல்லது இவர்
வயிற்றுக்கோ இப்பாரங்கள்
வரங்களாகும் நேரம்
அறிவுக்கு அப்பால்
நாட்கள் நகர்ந்திடும் நேரங்கள்
சாபங்களான ராகு காலங்களே!
புத்தக பாரங்கள் சுமக்கும்
புள்ளி மான்களுக்கும் - அவை
பாரங்களே!
மனதில் ஏற்றப்பட்ட
சுமைகள்
மகிழ்ச்சியை தொலைத்த
மனங்கள்
சூன்யங்களில் நிலைத்திடும் முன்
சந்தோஷங்களில் சிறகடிக்க
விளையாடும் நேரங்கள்
வேண்டிடும் மன பாரங்கள்
இவைகள் வரங்களா... சாபங்களா...