தோல்வி தான் வெற்றியை நிர்ணயிக்கின்றன

அடுக்குமாடிகள்
பலவாயினும்
அதை சுமக்கும்
அஸ்திவாரம் ஒன்றே ...

அடுக்குமாடியான
வெற்றிகள்
ஆணவம் கொண்டால்
அஸ்திவாரம் ஆட்டம் கண்டு விடும் ...

அஸ்திவார தோல்விகள்
தாங்கி பிடிப்பவையே
அடுக்கு மாடிகள் ...

தோல்விகள்
யார் கண்களுக்கும்
தெரியாது ...
ஆனால்
வெற்றியை
நிர்ணயிப்பது ...
அதுவே ...

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (11-Dec-15, 9:43 pm)
பார்வை : 67

மேலே