வெள்ளத்தில் வடிந்த காதல்

உன் விழிகளின் மழையால்
பெருக்கெடுத்த காதல் வெள்ளம்
என் குடிசைக்குள்
நிரம்பி விட்டது

நிரம்பிவிட்ட நீர்
என்னிடமிருந்து என்னையே
திசை மாற்றிவிட்டது

படகு சேவையில் சென்று
ஊரெங்கும் தேடிப்பார்க்கிறேன்
காணவில்லை என் உயிரை.

வானமே நீ உன்
பொழிதலை நிறுத்திக்
கொண்டு போனபோது
வடிந்து போயிருந்தது
உன் வெள்ளம்.

இப்போது திரும்பும்
திசையெல்லாம்
வெள்ள அனர்த்தத்தில்
குவிந்து கிடக்கும் குப்பையாய்
உன் நினைவுகள்.

அழகிய உன் பேரழுக்குகளை
கழுவிக்கொள்வதற்கு
சுத்த ஜலம் வேண்டித் தவிக்கிறேன்.
இப்போதைக்கு உப்புக் கலந்த
கண்ணீர் மட்டும்.

*மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (12-Dec-15, 1:27 am)
பார்வை : 173

மேலே