அரும்பு முகிழ்ந்தது அப்போதுதானா சொல்

அரும்பு முகிழ்ந்தது அப்போதுதானா சொல்
========================================

படபடத்த முகிற்றிரையுள்
வெட்கித்த நிலவு படும்பாட்டை
உவமை செய்துக்கொண்டிருந்தான் கவி

பூவைக்கேட்டுக்கொண்டா காற்று அதை வருடுகிறது ,,
ஏதும் பேசாதே
இங்ஙனமே எனை இரசிக்கவிடு உன்றனை
நமக்குள் இடர்ப்பட்டுக்கிடக்கும்
மோன சுவரை
உனக்குப் பிடித்ததுமாதிரியே
உடைத்தெறிந்துவிட,,,
உடையாள் உன்றன் ஏதேனுமொரு மோகாந்த இரவுகொடு,,,,

சற்றுத்தள்ளி
அதோ சருகுகள் ஏந்திய கிணற்றுவிளிம்பு
உம்மென்றிருந்தது
உருமாறும் மேகக்கூட்டம்
தவளை இரைச்சலை தரைமுழங்கின ம்ம்ம்

உன்னுடன் பேசும்போது
ஒத்தெல்லோ டெஸ்டிமோனாவின்
முதலிரவு படுக்கையை அலங்கரித்த
ப்ளூபெல் பூவின் வாசத்தை
உணர்கிறேன் தெரியுமா
புதர்மறைவிற்றான்
முத்தமிட்டுக்கொண்டோம் என்றாலும்
சந்தங்கள் திரையவிழ்த்துக்கொண்டிருந்தன ம்ம்ம்

அவ்விடங்குறித்த
என்றன் சிறுவயது புராணத்தைக் கேட்க
அறவே பிடிக்கவில்லை போல்
எனை உடுத்திவிட்டு
இப்படி எல்லாம் ஆரம்பித்து
எதையெதையோ பதிவுச்செய்யத்தொடங்கி
உனக்குள் தொலைந்துபோக
திக்கெட்டும் அவிரும் என்றன் தமிழ்க்கீற்றே
அம்மம்மா நீ இத்தனை செய்யவேண்டுமா என்ன
நேரங் களையாதே வா என முகஞ்சுளிக்கின்றாள் ம்ம்ம்

வட்டமிட்ட இடத்தில்
வாய் நனைத்து சங்கு பொறுக்குகின்றாள்
ஆறாத அடுப்படி கங்குபோல
கூடுவிட்டுக் கூடு பாய்ந்து தகித்துக்கொண்டிருந்தன
அழியாத உடற்பசி தா(தே)கங்கள் இரண்டு

ம்ம் அன்றுவரை
ஆண்(து)டுடுப்புப்புகாத ஜீவநதியில்
மழைவெள்ளம் புகுந்ததுபோலே
கட்டவிழ்ந்த பெண் ஓடம் ஒடிந்து
அங்ஙனமே அமிழ்வதுங் கண்டேன் ம்ம்ம்ம் ,,,,,,,

"பூக்காரன் கவிதைகள்"

எழுதியவர் : அனுசரன் (12-Dec-15, 12:59 am)
பார்வை : 142

மேலே