என் முதர்ப்பாடல்

யார் பெண்ணே நீயும் இங்கே
வந்தாயே கண்முன்னே..
என்காதல் கையில் கொண்டு
தந்தேனே நான் அன்பே!

எதைக்கண்டு காதல் பொங்குதோ?
உன்னை சேர நெஞ்சம் ஏங்குதோ?
வருவாயே எந்தன் வாழ்விலே...
நீ இன்றி நானில்லை!!

உனைப் பார்த்தேன், நிலவு தோற்றது,
இமை மூட கண்ணும் மறுக்குது!
உன்னை எண்ணி இதயம் துடிக்கிது!
என்செய்வேன் என் அன்பே??

என் பக்கம் வந்திடு,
ஒரு முத்தம் தந்திடு,
என் சுவாசக்காற்றே நான்
உன்னாலே வாழ்கின்றேன்!

கண்மூடும் நாள் வரை..
நம் காதல் வாழுமே...
துணை சேர அன்பே நீயும் வந்தாலுமே!!

யார் பெண்ணே நீயும் இங்கே
வந்தாயே கண்முன்னே!
என்காதல் கையில் கொண்டு
தந்தேனே நான் அன்பே!!

எழுதியவர் : நேதாஜி (13-Dec-15, 2:00 pm)
பார்வை : 75

மேலே