கல்யாணத்துக்கு முன்னாடி பொண்ணுங்கள நம்பக் கூடாது கல்யாணத்துக்கு அப்பறம் ஆம்பளைகள நம்பக் கூடாது
கல்யாணமாகி ரெண்டு வருஷம் ஆன ஒரு அக்கா
கைக்குழந்தையோட கடைக்கு காயின் பாக்ஸ்ல
பேச வந்தாங்க. காயின் பாக்ஸ் இல்லாததால என்னோட
ஃபோன வாங்கி மிஸ் கால் குடுத்து அவங்க அம்மாகிட்ட
பேசுனாங்க.
'அம்மா., காலைல இருந்து சாப்பாடு செஞ்சு வெச்சு,
துணி தொவச்சு,பாத்திரம் கழுவி எல்லா வேலையும்
தனி ஆளா செஞ்சுட்டு இருக்கேன் ஒடம்பு வேற சரியில்ல
இவ வேற (குழந்தை) அழுதுட்டே இருக்கா
கரன்ட்டு வேற போய் போய் வருது
இந்தாளு (புருசனையேதான்) குக்கர தூக்கீட்டு
அடிக்க வருதும்மா சும்மா சும்மா திட்டீட்டே
இருக்குதும்மானு சொல்லும்போதே அழுதுருச்சு.
என் செல்லுல பேலன்ஸ் இல்ல என் நம்பருக்கு
கூப்புடுமா-னு சொல்லிட்டு போய்ருச்சு.
டியர் ஆண்களே உங்களுக்கு என்னதான்யா பிரச்சனை
கல்யாணத்துக்கு முன்னாடி காதலிக்க ஒரு பொண்ணு
இல்லாம எவ்வளவு கஷ்டப்படுறோம் ஆனா கூடயே
ஒரு பொண்ணு இருந்தா போரடுச்சுருதோ.?
போரடுச்சாக்கூட தப்பில்ல அதுக்காக பொண்டாட்டிய
அடிக்கிறது தப்பு ப்ரோ.
கல்யாணத்துக்கு முன்னாடி பொண்ணுங்கள நம்பக் கூடாது.
கல்யாணத்துக்கு அப்பறம் ஆம்பளைகள நம்பக் கூடாது...#
நன்றி: முகநூலில் மதன்