காகிதப் படகு

மழைத் துளி விழுந்து
நீரில் அமிழும்
காகிதப் படகு

மழை இல்லாவிடின்
காகிதப் படகின்
வேலையேது ?

மழை இருப்பின்
விளையாட்டுச் சிறுமியின்
கையில் உருவாகும்
கலைப் படைப்பு

பாய்ந்தோடும் தெரு நீரில்
மிதந்தோடும் காகிதப் படகு

காகிதப் படகின் திண்டாட்டம்
விளையாட்டுச் சிறுமியின்
கொண்டாட்டம்

காகிதப் படகின்
ஆட்டம் முடிய
விளையாட்டுச் சிறுமியின்
கொண்டாட்ட முடிவு

காகிதப் படகின்
வாழ்க்கை ஓட்டம்
சிறுமியின் இன்னொரு
படைப்பின் அத்திவாரம்

எழுதியவர் : fasrina (15-Dec-15, 1:28 pm)
Tanglish : kakithap padaku
பார்வை : 90

மேலே