கனமழைக்காதலன்

* நாற்று நட்டவன்
சிரிக்கிறான் ;
சூளை போட்டவன்
அழுகிறான் ..!

* உப்பு விற்கிறவன்
கரைகிறான் - படகில்
கரையோரவாசியினர் ஏற்றி
போராளி விரைகிறான் ...!

* யார்
எக்கேடு கெட்டாலென்ன...?

குடை விரிக்கிறான்
குமரிக்கு ;

கொடைவள்ளலாய்
குமரன்...!

எழுதியவர் : சுரேஷ்முத்தையா (15-Dec-15, 4:22 pm)
பார்வை : 74

மேலே