கவிதை சொல்லி வெறுப்பேத்துவேன்

அழகே அழகே அழகே
உன்னிடம் உன்தன்
காதல் கேட்பேன்

நீ போகும் வழியெல்லாம்
என்தன் காதல் விதைப்பேன்

அன்பே அன்பே அன்பே
உன்னிடம் உன்தன்
கண்கள் கேட்பேன்

நான் போகும் வழியெல்லாம்
உன்தன் விழிகள் காண்பேன்

என் அன்பை கொட்டி கொட்டி
உன்னை தீண்ட போகிறேன்

என் கவிதையெல்லாம்
சொல்லி சொல்லி
உன்னை வெறுப்பேத்துவேன்

உன் உருவம் கடல் மணலில் வரைவேன்...
அதற்காக அந்த அலையையும்
தடுப்பேன்....

நிலவே நிலவே நிலவே
உன்னிடம் உன்தன்
இதழ்கள் கேட்பேன்

என் நாள்கள் அனைத்தும் அதில்
முத்தம் கேட்பேன்

எழுதியவர் : நவின் (15-Dec-15, 5:25 pm)
பார்வை : 158

மேலே