மங்கை அவள் மனது வேண்டும்

எனை பார்த்து சென்றாய் கூட்டிற்கு ...
உனை பார்த்து சென்றேன் கூட்டை விட்டு ...


உனை ரசித்து பார்த்தேன் வீட்டில் ...
எனை சிதைத்து பார்பாயோ சுடுகாட்டில் ...

தலையும் புரியவில்லை ...
காலும் புரியவில்லை ....
என் சவத்தில்
உன் பூக்கள்
எனக்கு மாலை
சூடும் வேளை ...

உனை வந்து சேர
எனக்கு கால்கள் இல்லை ...
உனை பார்க்க
எனக்கு கண்கள் இல்லை ...
உனை தழுவ
எனக்கு கைகள் இல்லை ...
உனை காதலிக்க
எனக்கு இதயம் இல்லை ...
உனை சிந்திக்க
எனக்கு மூளை இல்லை ...
என்று ...
தவிக்கிறேன் ....
நாளும் ....
சவப்பெட்டிக்குள் ....
ஆனால்
எனக்கு தெரியும்
என் ஆத்மா
நீ சுவாசிக்கும் காற்று
உன்னை சுற்றியே திரியும் ...

தலையும் இல்லை ...
காலும் இல்லை ...
ராகுவும் இல்லை ...
கேதுவும் இல்லை ...
என்பதால் நான் உன்
காதலன் இல்லையா ? ...

அழகு அது இருந்தாலும் ...
போனாலும் ...
என் உயிர் ஓடினாலும் ...
நின்றாலும் ...
என் காதல் அப்படியே
மனதில் பூட்டியே பாதுகாவலனாய் ...
நிற்பேன் உன் மனதின் வெளியே ...

ராணியே ...
எனை ஏற்று நங்கையில் கரைப்பாயா ...
மறுத்து கங்கையில் கரைப்பாயா...

எதுவென்றாலும்
ஒரே முறை என் கண்ணீரை துடைத்துவிடு ....
இல்லையேல் என் உயிர் கதவை அடைத்துவிடு ....

காத்திருக்கிறேன்
காலமெல்லாம் ....
கண்மணி ....
வருவாயென ..

காதல் கைகூடுமா ...
உயிர் ஊசல் ஆடுமா ...
உன் நினைவிலே கடக்குது யுகமும் ...
என் மனதிலே துடிக்குது காதலும் ...


மண்ணில் செடியை நட்டேன் ...
மரமானது ...
என்னில் உன்னை வைத்தேன் ...
காடானாய் ....

கண்ணீரில் வெந்நீர் போட்டேன் ...
கானல் நீரில் தூண்டில் போட்டேன் ...

கிண்ணத்தில் மதுவை கண்டேன் ...
உன் கன்னக் குழியில் ...

இதயத்தில் உன்னை கொண்டேன் ...
என் சின்ன உயிரில் ...

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (15-Dec-15, 5:31 pm)
பார்வை : 135

மேலே