நண்பேன்டா

முடிவு நெருங்கி வர
முகமலர்ந்து நான் செல்ல
ஒரு நாள் நீ வருவாயென
வாசலில் நான்
காத்திருக்கிறேன்

சமரசம் பேச
எண்ணமில்லை என்னிடம்
எதிர்பார்ப்பெல்லாம்
போகாத இடத்திற்கு—ஒரு
துணையோடு போகத்தான்

நீ வந்தால்
எனக்கு துணையாய்
ஒரு நல்ல நட்பு,
நீ வராமல் போனாலோ
என்னுயிர் காக்கும்
ஆருயிர் நண்பேன்டா!

எழுதியவர் : கோ. கணபதி. (15-Dec-15, 5:31 pm)
பார்வை : 93

மேலே