ப்ளூ லேக் வியூ

பல மரங்களையும்
கூடும் நீரையும் சமாதியாக்கி
காளானாய் முளைத்து நின்றிருந்தது
அந்த புதிய காலனி...

மார்க்கட் போன நடிகையும்
நெடுந்தொடர் நடிகையும்
கூவிக்கூவி அழைத்து
கூப்பாடு போட்டதில்
அத்தனையும் விற்றுத்தீர்ந்திருந்தது...

விளம்பரத்தால் கவரப்பட்டோ
நகரத்து நிலமதிப்பை கணக்கில் கொண்டோ
நடுத்தர வர்க்கம் அனைத்தும்
படையெடுத்து நிலத்தை சிறையெடுத்திருந்தது...

அங்கே ஏரி இருந்ததற்கான ஞாபகார்த்தமாகவோ
இல்லை ஒரு அழ‌கிற்காகவோ
அந்த காலனிக்கு சூட்டிய பெயர்
"ப்ளூ லேக் வியூ"

வருண பகவானின் பார்வை
அவ்வப்போது பட்டவரை பிரச்சனையில்லை..
என்று அவன் ஆசி
அளவுக்கு அதிகமாகியதோ
அன்றே 'ப்ளூ லேக் வியூ'விற்குள்
ஒளிந்திருந்த ஏரி
"வியூ"வாகத்(தலைகாட்டத்) தொடங்கியது....

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (15-Dec-15, 10:19 pm)
பார்வை : 511

மேலே