ஏ மயிலே

நேற்று வரை கனவினிலே
கூச்சலிட்ட குயிலே,
நேரில் நீ வந்தாலும் ஏன்
தள்ளி போற மயிலே!

தங்க மயில் தோகைவிரிக்க
மயங்குது ஏ மனசு
தத்தி வரும் மானல்லோ நீ
மெல்ல ஏங்குதே ஏ வயசு!

உச்சிமுதல் பாதம் வரை
முத்தத்தால் சலவை செய்!
என்னை ஆற்றங்கரை ஓரத்தில்
உன் உடம்பு மேல காய வை!

ஈரம் என்னுள் கொறைய
உன் கையால புலிஞ்சுபோடு,
ஈரம் காஞ்ச பின்னே
உன் கண்ணால கிலிப்பபோடு!

உன் ஓரவிழி பார்வையால
ஒரு நூறு கவிதை சொல்லுற,
உன் பக்கத்தில் வந்த மட்டும்
என்ன உருக்கிதான் போடுற!

உன் பல்லழகு பார்த்தே
பச்சரிசி வேகுமடி,
உன் பாதி இடை பார்த்தே இந்த
பாழ்நெஞ்சு நொகுதடி!

பூசி வச்ச சாயத்துல
நான் அச்சு தான் எடுக்கவா! அதற்கு
உன் உதடு மேல உதடு வச்சு
நான் இச்சு தான் தரவா!?

நெத்தியில ஒத்த பொட்டு
அழகா தான் இருக்குதடி,
ஒத்த பொட்டு நுனியில தான்
ஏ உசுரு தவிக்குதடி!

எட்டடியில் பார்த்தா
நீ ஒரு தாஜ்மகால்,
எனக்குள்ள எப்போதும்
நீ ஒரு காதல் மகால்!

எழுதியவர் : (16-Dec-15, 1:09 am)
Tanglish : yae mayile
பார்வை : 132

மேலே