நம்பினார் கெடுவதில்லை

குண்டுப் பெண்
குண்டு குண்டு
என்று அழைக்கப் படுகிறாள்
குண்டாகப் பிறக்கவில்லை
குண்டாக வளரவில்லை
இப்ப மட்டும் ஏன் குண்டு
அவள் மனம் சஞ்சலப் படுகிறது
திருமணமும் தள்ளித் தள்ளிப் போகிறது
ஆனாலும் அவள் பெற்றோருக்கு
பாரமில்லை ஒரேயொரு செல்லப் பெண்
ஆனாலும் அவள்மனம் பருவ வயதைஎட்டியதும்
எண்ணங்கள் ஆசைகளால் மாறுபடுகின்றன,
அவள் ஏக்கமும் தவிப்பும் புரிகிறது
வரவேண்டும் வரனாக இறைவன் வரம்
கேட்கின்றாள் இறைவனிடம்
கேட்கும் வரமும் வரனாக அமைகின்றது
இனிதாக இல்லறத்தில் குடி கொள்கிறாள்
எத்தனை பேர் பழித்தாலும்
படைத்தவன் அவள் பக்கம்
நம்பினார் கெடுவதில்லை நான்கு மறைத் தீர்ப்பு .
உலகம் போற்றும் ஒரு ஜோடிக் கிளியாக
. அவளும் அவனும் இன்று .

எழுதியவர் : பாத்திமா மலர் (16-Dec-15, 3:26 pm)
பார்வை : 122

மேலே