திருட்டு கவிஞன்
திருட்டு கவிதைகளை,
வருடும் இதயத்தோடு,
சமர்பிக்க நினைக்கையில்,
சஞ்சலத்தில் நனைகிறேன்!!
என்காகித தேகத்தில்,
அடுத்தவன் கவிதைகள்.
என்பேனா முன்பு,
குற்றவாளியாக நான்!!
என்மூளை மடிப்புகளில்,
தேளின் விஷத்தன்மை.
நாக்கின் சுழற்சியில்,
நச்சாய் வார்த்தைகள் !
மனித ரத்தத்திற்கு,
விதிவிலக்கு நானில்லை-ஆதலால்
என்மனசாட்சியின் புலம்பலுக்கு-நான்
பொறுப்பாக விரும்பவில்லை....
உலகம் பேசுகிறது-என்னை கவிங்கனாய் ரசிக்கிறது!-என்
மனசாட்சியின் கேள்விக்கோ .....-நான்
ஒரு திருட்டுகவிஞன்!!!!!